இளையராஜா ஸ்டூடியோவுக்கு திடீரென வந்த கமல்ஹாசன்..!

 
இளையராஜாவை சந்தித்த கமல்ஹாசன்
இசையமைப்பாளர் இளையராஜாவை அவருடைய ஸ்டூடியோவில் வைத்து நடிகர் கமல்ஹாசன் சந்தித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் இளையராஜா புதியதாக ஸ்டூடியோவை கட்டியுள்ளார். அதற்காக நடைபெற்ற திறப்பு விழாவின் போது நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் வந்து ஸ்டூடியோவை சுற்றி பார்த்துவிட்டு சென்றனர்.

இசையமைப்பாளர் இளையராஜா கட்டியுள்ள முதல் ஸ்டூடியோ என்பதால் கோடம்பாக்கம் பகுதியில் முக்கிய இடமாக இது மாறிவிட்டது. இந்த இசையரங்கத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘விடுதலை’ படத்திற்கான இசைக்கோர்ப்பு பணிகளை இளையராஜா செய்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இளையராஜா ஸ்டூடியோவுக்கு முதன்முறையாக நேற்று வந்தார். இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்துப் அவர் பேசினார். அப்போது அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்ததாக கமல்ஹாசன் தரப்பில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. மேலும் அவர்கள் இணைந்து பணியாற்றுவது குறித்து எந்த விஷயமும் பேசிக்கொள்ளவில்லை என்கிற விபரமும் தெரியவந்துள்ளது.

From Around the web