வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் கமல்ஹாசன்..?

 
கமல்ஹாசன் மற்றும் வெற்றிமாறன்

விக்ரம், இந்தியன் 2 படங்களில் கைவசம் வைத்துள்ள நடிகர் கமல்ஹாசன், அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வரும் வெற்றிமாறன் தேசியளவில் பல தாக்கங்களை உருவாக்கிய படங்களை இயக்கியுள்ளார். இவருடைய இயக்கத்தில் வெளியான படங்களில் ஆடுகள், விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் தனி கவனமீர்த்தன.

இந்த வரிசையில் நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விரைவில் இதற்கான ஷூட்டிங் நடைபெறவுள்ளது.

இதையடுத்து சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை இயக்கும் வெற்றிமாறன், அதை தொடர்ந்து கமல்ஹாசனுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை கோபுரம் ஃப்லிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web