திடீரென அமெரிக்கா செல்லும் கமல்ஹாசன்..!

 
1
கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் இந்த படப்பிடிப்பை முடித்தவுடன் அவர் அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு அவர் செயற்கை நுண்ணறிவு என்று கூறப்படும் ஏஐ டெக்னாலஜி குறித்த படிப்பை படிக்க இருப்பதாகவும் இந்த படிப்பு மூன்று மாதங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மூன்று மாதங்கள் அவர் அமெரிக்காவில் தங்கி இருந்து படிப்பை முடித்துவிட்டு தான் சென்னை வர இருப்பதாக தெரிகிறது.

கமல்ஹாசன் சென்னை வந்த பிறகுதான் அன்பறிவ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அது மட்டும் இன்றி கமல்ஹாசன் வந்தவுடன் தான் பிக் பாஸ் அடுத்த சீசன் ஆரம்பிக்கும் என்றும் கூறப்படுகிறது.

மூன்று மாதங்கள் முழு அளவில் ஏஐ டெக்னாலஜியை படித்து அதில் முழுமையாக ஆய்வு செய்து பல விஷயங்களை தெரிந்து கொண்ட பின்னர் அவரது அடுத்த அடுத்த படங்களில் ஏஐ டெக்னாலஜி குறித்த காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

From Around the web