விக்ரம் படத்தில் மாற்றுத்திறனாளியாக நடிக்கும் கமல்ஹாசன்..?

 
கமல்ஹாசன்

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி,ஃபகத் பாசில் என படத்தின் காஸ்டிங்கே மிரட்டலாக உள்ளது.

முன்னதாக வெளியான தகவலின்படி கமல்ஹாசன் இந்த படத்தில் தேனி மாவட்டத்தில் வசிக்கும் தாதாவாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இவருடைய கதாபாத்திரம் குறித்த முக்கிய் விபரங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி விக்ரம் படத்தில் கமல்ஹாசன் பார்வை மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் விதமாக விக்ரம் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் டீசரில் உள்ள அம்சங்களை குறிப்பிடுகின்றனர்.

போஸ்டர் கமல்ஹாசன் காது அருகில் வைத்து துப்பாக்கியை தோட்டாவை முன்பு தள்ளுவார். அதேபோல டீசரில் தன்னை சுற்றி கேட்கும் ஒலியை வைத்து மட்டுமே செயல்படுவார். அவருடைய கண்களும் அசைவற்றும் இருக்கும். இதனால் இந்த தகவலை பலரும் உறுதி செய்துள்ளனர்.

ஏற்கனவே கமல்ஹாசன் ராஜ பார்வை படத்தில் பார்வை குறைபாடு கொண்ட இளைஞராக நடித்துள்ளார். அதனால் விக்ரம் படத்துக்கும், ராஜ பார்வை படத்துக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்று ரசிகர்கள் சமூகவலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
 

From Around the web