வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் கமல்ஹாசன்: ஸ்ரீப்ரியா தகவல்..!

 
கமல்ஹாசன் மற்றும் வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக நடிகை ஸ்ரீப்ரியா தகவல் வெளியிட்டுள்ளார்.

பிரபல யூ-ட்யூப் சேனலுக்கு நடிகை ஸ்ரீப்ரியா நேர்காணல் அளித்திருந்தார். அவரிடம் ‘பாபநாசம்- 2’ படத்திற்கான பணிகள் துவங்கப்படுமா என்கிற கேள்வியை நெறியாளர் முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்து பேசிய ஸ்ரீப்ரியா, கமல்ஹாசன் இல்லையென்றால் பாபநாசம் இரண்டாம் பாகம் கிடையாது. தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு பஞ்சமில்லை. ஆனால் கமல் இல்லாமல் பாபநாசம் 2 படம் உருவாகாது என்றார்.

இதன்மூலம் பாபநாசம் முதல் பாகத்தில் நடித்த கவுதமி, அதனுடைய இரண்டாம் பாகத்தில் நடிக்கமாட்டார் என்று உறுதியாகியுள்ளது. மேலும் அவருடைய கதாபாத்திரத்திற்கு மாற்றாக வேறொரு நடிகையை நடிக்கவைக்க படக்குழு ஆலோசித்து வருவது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து பேசிய ஸ்ரீப்ரியா, பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் விக்ரம் படத்தில் கமல்ஹாசன் பிஸியாக நடித்து வருகிறார். அதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்திலும் அவர் நடிக்கவுள்ளார். இதற்கு பிறகு தான் புதிய படங்கள் குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

கமல்ஹாசனும் வெற்றிமாறனும் சேர்ந்து பணியாற்றுவது குறித்து பேசியது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் அது கிடப்பில் போடப்பட்டதாக நினைக்கப்பட்டது. ஆனால் தற்போது ஸ்ரீப்ரியா வெளியிட்ட தகவல் மூலம் அவர்கள் இணைவது உறுதியாகியுள்ளது.

From Around the web