முற்றிலும் கதருக்கு மாறும் கமல்ஹாசன்..!

 
நடிகர் கமல்ஹாசன்
நடிகரும் அரசியல் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 5 குறித்த முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த 4 சீசன்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விரைவில் இதனுடைய ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகவுள்ளது.

அதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கிவிட்டன. ப்ரோமோ ஷூட்டுகள், ஃபோட்டோஷூட்டுகள் போன்றவை விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனுக்கு ஆடை வடிவமைத்து தருபவர் அமிர்தா ராம்.

புதியதாக துவங்கவுள்ள சீசனுக்கும் இவர்தான் ஆடை வடிவமைப்பாளர். அவர் சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 5 குறித்த சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதில், கமல்ஹாசன் குறித்து அவர் பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதன்படி கடந்த சீசனில் அவ்வப்போது கமல்ஹாசன் கதர் ஆடைகளை அணிந்து வந்தார். அதற்கு பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் இந்த சீசன் முழுக்க கமல்ஹாசன் கதர் அடையில் தோன்றவுள்ளார் என்று அவர் கூறினார்.

மேலும் கதர் ஆடைகள் மட்டுமின்றி கையால் தயாரிக்கப்பட்ட இயற்கையான ஆடைகளை கமல்ஹாசன் இந்த சீசனில் அணிந்து வரவுள்ளார். இந்த ஆடைகள் முழுக்க ஐரோப்பிய டிசைன் அமைப்பை கொண்டு வடிவமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From Around the web