கமல்ஹாசன் வெளியிட்ட பிரபல நடிகரின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

 
1

நடிகர் சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும், அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களும் நல்ல வசூலை பெற்று தருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சமீபத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்த ’வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அவர் ஹீரோவாக நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த பர்ஸ்ட் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி இந்த படத்தின் தயாரிப்பாளர் அன்புச்செழியன் மற்றும் ஹீரோ சந்தானம் ஆகியோர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கூறி இருப்பதாவது:  எனது அன்புக்குரிய நண்பர், கோபுரம் பிலிம்ஸ்  அன்புசெழியன் வழங்கும், சுஸ்மிதா அன்புசெழியன் தயாரிக்கும், தம்பி சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் பெயரையும், போஸ்டரையும் வெளியிடுவதில் மகிழ்கிறேன்.

’இங்க நாங்க தான் கிங்கு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது என்பதும் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கதை அம்சமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆனந்த நாராயணன் இயக்கத்தில், டி இமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த மேலும் சில முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக பிரியா லயா என்பவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

From Around the web