சினிமாவை விட்டு விலகுவேன்- கோவையில் கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு..!

 
சினிமாவை விட்டு விலகுவேன்- கோவையில் கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு..!

அரசியலுக்கு சினிமா இடையூறாக இருந்தால் சினிமாவை விட்டு விலகி விடுவேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது அவருடைய சினிமா ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போயிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார் களம் காணுகின்றனர்.

இதனால் தற்போதைய தமிழக சட்டப்பேரவை தேர்தல் களத்தில் கோவை தெற்கு தொகுதிக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது. அனைவரும் உற்றுநோக்கும் தொகுதியாக அது உள்ளது. எனினும் இத்தொகுதி  இந்த வேட்பாளர் மூவருக்கும் சவால் மிகுந்த களமாகவே இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இந்நிலையில் பரப்புரை முடித்துவிட்டு கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசியல் வேண்டாம் என்று இருந்த நான் எந்த கடத்தில் அரசியலுக்கு வந்தேன் என்று அனைவருக்கும் தெரியும். நான் மறுபடியும் சினிமாவில் நடிக்க சென்றுவிடுவேன் என்று எதிர்கட்சியினர் பரப்புரை செய்கின்றனர்.

எம்.ஜி.ஆர் எம்.எல்.ஏ-வாக இருந்துகொண்டு படங்களில் நடித்தார். அது அவருடைய அரசியல் பாணியாக இருந்தது. அடுத்து நான் நடிக்கும் படங்களுக்காக வாங்கும் சம்பளம் அனைத்தும் மக்களுக்காக செலவு செய்வேன். சினிமா என்னுடைய தொழிலாக இருந்தாலும், அது அரசியலுக்கு இடையூறாக இருந்தால் சினிமாவை விட்டு விலகுவேன். தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள படங்களில் மட்டுமே நான் நடித்து கொடுப்பேன் என கமல்ஹாசன் மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார். 
 

From Around the web