வைரலாகும் நடிகர் கமல்ஹாசன் Voice Note... உடம்பு சுகம் இல்லை என்றாலும் மனசு நன்றாக இருக்குது

 
1

கமல்ஹாசன் ஆடியோவை நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு நயன்தாரா நடித்த ’கோல்டு’ என்ற படம் வெளியாகி சுமாரான வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி நடிக்கும் படத்தை இயக்கி அவர் இயக்கி வந்த நிலையில் திடீரென தான் சினிமாவை விட்டு விலகப் போவதாகவும் தனக்கு உடல் நல குறைவு இருப்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறி இருந்தார். இதனை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் கமல்ஹாசன் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அல்போன்ஸ் புத்திரன் ஒரு பாடலை அவரே பாடி ஆடியோவாக உருவாக்கி இருந்தார். ஆனால் அந்த ஆடியோவை எப்படி கமல்ஹாசனிடம் கொண்டு போய் சேர்ப்பது என்று தெரியவில்லை. இதையடுத்து அவர் அந்த ஆடியோவை இயக்குனர் பார்த்திபனுக்கு அனுப்பிய நிலையில் பார்த்திபன் கமல்ஹாசனுக்கு அனுப்பினார்.

அந்த பாடலை கேட்ட கமல்ஹாசன் பதிலுக்கு ஒரு ஆடியோவை பார்த்திபனுக்கு அனுப்பி உள்ளார். அந்த ஆடியோவில் ’அல்போன்ஸ் புத்திரன் உடம்பு சுகம் இல்லை என்றாலும் மனசு நன்றாக இருக்கிறது. குரல் சந்தோஷமாக இருக்கிறது. அப்படியே சந்தோஷமா அவர் இருக்க வேண்டும். அவர் எடுக்கும் முடிவு கூட அவருடையது என்றாலும் உடம்பை நன்றாக பார்த்துக் கொள்ள சொல்லுங்கள் டேக் கேர் அல்போன்ஸ், என்று கூறியிருந்தார்.


 

From Around the web