யூடியூபர் இர்பானை நெகிழவைத்த கமல்..! வைரல் வீடியோ..!

 
1

உணவு பிரியர்கள் மத்தியில் பிரபலமானவர் யூடியூபர் இர்பான். இவர் இர்பான்ஸ் வியூ என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் சினிமா விமர்சனங்களை செய்து வந்த அவர், அதற்கு வரவேற்பு கிடைக்காததால், பல்வேறு ஊர்களுக்கு சென்று அங்குள்ள உணவுகளை சுவைத்து, அதனை வீடியோவாக வெளியிட தொடங்கினார்.

தமிழ்நாட்டில் பல ஊர்களுக்கு சென்று பல வீடியோக்களை பகிர்ந்துள்ள அவர், வெளிநாடுகளுக்கும் சென்றும் அங்கும் பல ஹோட்டல்களில் சாப்பிட்டு வீடியோக்கள் பகிர்ந்துள்ளார். தற்போது இர்பான் பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களை நேரில் சந்தித்து கலந்துரையாடி அந்த வீடியோக்களையும் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார்.

Irfan

இந்நிலையில் வரும் 14-ம் தேதி இர்பானுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இதற்காக பல பிரபலங்களை தனது குடும்பத்தினருடன் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வருகிறார். அண்மையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தனது குடும்பத்தினருடன் சந்தித்து இர்பான் திருமண அழைப்பிதழ் வழங்கிய புகைப்படம் வெளியாகி வைரலானது.

அந்த வகையில் தற்போது உலக நாயகன் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளார். தனது அம்மா, சகோதரியுடன் கமலை சந்தித்துள்ளார். அழைப்பிதழை பெற்றுக்கொண்டு இர்பானை வாழ்த்திய கமல்ஹாசன், தூணிலும் இர்பான்; துரும்பிலும் இர்பான் என கூறி, அவர்களுடன் சிறிதுநேரம் கலந்துரையாடினார். இதுகுறித்த வீடியோ காட்சிகளை இர்பான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

யூடியூபர் இர்பானுக்கு கடந்த 2021-ம் ஆண்டே திருமணம் நடப்பதாக இருந்தது. அப்போது திருமண நிச்சயம் முடிந்த பின்னர் மணப்பெண்ணுக்கும் இர்பானுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் திருமணத்தை நிறுத்திவிட்டார் இர்பான். பின்னர் திருமணம் நின்றது குறித்து இர்பான் யூடியூபில் வீடியோவும் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web