கமல் கூட நடிச்ச கமாலினி முகர்ஜியா இது..? இப்படி ஆகிட்டாங்களே..!!
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கமாலினி முகர்ஜி, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தார். கடந்த 2006-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான வேட்டையாடு விளையாடு படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படத்தில் கமல்ஹாசன் மனைவியாக சில காட்சிகளே வந்துபோனார். எனினும் அது அன்றைய காலத்தில் மிகப்பெரிய வைரலை கிளப்பியது.
அதை தொடர்ந்து இறைவி, காதல்னா சும்மா இல்லை போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். அதற்கு பிறகு பட வாய்ப்பு குறைந்ததால் தனது சொந்த ஊரான கல்கத்தாவுக்கு திரும்பிவிட்டார். இந்நிலையில் அவருடைய சமீபத்திய புகைப்படம் வெளியாகி நெட்டிசன்கள் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் உடல் எடை கூடி ஆளே ஆடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போயுள்ளார். அதை பார்க்கும் நெட்டிசன்கள் பலர், வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்த கமாலினியா இது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அவருடைய முந்தைய புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும் ஒப்பிட்டு பலரும் கமெண்டு செய்து வருகின்றனர்.