இன்று வெளியாகும் கமலின் ‘விக்ரம்’ பட ஃபர்ஸ்ட் லுக்- ரசிகர்கள் உற்சாகம்..!
 

 
கமல்ஹாசன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தேதியில் தமிழக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் படங்களுள் ஒன்றாக உள்ளது ‘விக்ரம்’. மாஸ்டர் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஃபகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் படத்தின் வலுவான ஒரு கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை நடிக்கவைக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகிறது. அப்போது படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி நடிக்கின்றனரா என்கிற விபரம் தெரிந்துவிடும்.

From Around the web