கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் திடீர் மரணம்... ரசிகர்கள் ஷாக்..!

 
1

கனா காணும் காலங்கள் சீரியலில் பிடி மாஸ்டர் ஆக நடித்து பிரபலமானவர் அன்பு என்கிற அன்பழகன்.அதைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி உட்பட பல்வேறு சீரியல்களில் நடித்திருந்தார்.தற்போது கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களான கவின், ரியோ ஆகியோர் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் அறிமுகமானவர்கள் தான். இந்த நிலையில், கனா காணும் காலங்கள் முதல் சீசனில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான அன்பு என்கிற அன்பழகன் திடீரென மரணமடைந்துள்ளார்.

தொடர்ந்து ஜீ தமிழ் சீரியலில் நடித்து வந்த இவர் திடீரென மரணம் அடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேப்டன் விஜயகாந்தின் மரணம் தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சி ஏற்படுத்தி உள்ள நிலையில் திரையுலக பிரபலங்களின் அடுத்தடுத்த மரணம் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


 


 

From Around the web