மீண்டும் பாலிவுட் சினிமாவில் புயலை கிளப்பும் கங்கனா..!!

இந்தி சினிமா இயக்குநர் கரண் ஜோஹர் மற்றும் பிரபல நடிகர் ரன்பீர் கபூர் இருவரையும் கடுமையாக சாடி கங்கனா ரணாவத் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
 
kangana ranaut

பாலிவுட் சினிமா பல தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரபலமானவர் கங்கனா ரணாவத். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு பிறகு, அவர் மேலும் வீரியத்துடன் பாலிவுட் சினிமாவை எதிர்த்து வருவதாக தெரிகிறது.

அங்கு நிலவும் வாரிசு அரசியல், மாஃபியா நடவடிக்கைகள் போன்றவற்றை அவர் கடுமையாக எதிர்க்கிறார். சினிமா வாரிசு என்கிற பெயரில் படங்கள் நடிக்க வந்து, அதன்மூலம் பிரபலமடைந்த நடிகர்களை கங்கனா எப்போது சும்மா விடுவதில்லை.

இம்முறை அவர் பிரபல நடிகர் ரன்பீர் கபூரை சகட்டு மேனிக்கு விமர்சித்து வருகிறார். விரைவில் அவர் ராமாயனக் கதையில் ராமனாகவும் , மனைவி ஆலியா பட் சீதையாகவும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதேபோல கரண் ஜோஹர் ராக்கி ஆர் ராணி கி ப்ரேம் கஹானி என்கிற படத்தை இயக்கவுள்ளார்.

ஏற்கனவே ரன்பீர் கபூர் ராமனாக நடிப்பது குறித்து கடுமையாக விமர்சித்த கங்கனா, தற்போது கரண் ஜோஹர் படம் இயக்குவதையும் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டா ஸ்டோரியில். ரன்பீர் மற்றும் கரண் (அவர்க பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை) இருவரும் பொறாமைப்படக்கூடியவர்கள், புறம் பேசுபவர்கள். இவர்கள் தான் சினிமா துறையின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகமாக செயல்பட்டு வருகின்றனர் என்று கடுமையாக கங்கனா விமர்சித்துள்ளார்.

இதுவரை இவருடைய பதிவு எதற்கும் ரன்பீர் கபூர் மற்றும் கரண் ஜோஹர் இருவரும் எதிர்வினை புரியவில்லை. ஊடகங்களின் கேள்விகளையும் தவிர்த்து வருவதாகவே தெரிகிறது. ஆனால் கங்கனாவின் பதிவு நெட்டிசன்கள் பலரிடையே தாக்கத்தை எதிர்த்து வருகிறது. இதனால் கரண் ஜோஹர் மற்றும் ரன்பீர் கபூர் மீது அவர் ஒருவித வெறுப்பு அரசியல் கட்டவிழ்த்துள்ளதாக சினிமா உலகில் கூறப்படுகிறது.
 

From Around the web