சமந்தாவை பாராட்டி எண்ணெய்யை ஊற்றும் கங்கனா..!

 
கங்கனா மற்றும் சமந்தா

‘தி ஃபேமிலி மேன்’ சீசன் 2 தொடரின் டிரெய்லர் தமிழக அரசியல் களத்தில் விவாதங்களை கிளப்பி வரும் சூழலில் நடிகை கங்கனா, நடிகை சமந்தாவுக்கு பாராட்டு கூறியுள்ளது முக்கிய பேசுபொருளாகியுள்ளது.

மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி மற்றும் சமந்தா ஆகியோருடைய நடிப்பில் உருவாகியுள்ள ‘தி ஃபேமிலி மேன்’ சீசன் 2 தொடருக்கு இந்தியளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் தொடரின் டிரெய்லர் வெளியானதை அடுத்து தமிழக அரசியல் களத்தில் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தொடர் தமிழர்களையும் தடை செய்யப்பட்ட எல்.டி.டி.இ அமைப்பையும் தவறாக சித்தரிப்பதாக கூறி கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த தொடரில் நடிகை சமந்தா போராளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ‘தி ஃபேமிலி மேன்’ சீசன் 2 டிரெய்லரை பார்த்துள்ள நடிகை கங்கனா ரணாவத், சமந்தாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், சமந்தாவை குறிப்பிட்டு ”இந்த பெண்ணுக்கு என் இதயம் இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

எப்போதும் பலனில்லாமல் கங்கனா எதையும் செய்யமாட்டார். முன்னதாக வெளியான இந்த சீரியலில் முதல் சீசனை அவர் பார்த்தாரா என்பது கூட தெரியாது. ஆனால் இப்போது இரண்டாவது சீசன் பேசுபொருளாகியுள்ளதை அடுத்து கங்கனா, சமந்தாவின் கதாபாத்திரத்தை குறிப்பிட்டு பாராட்டியுள்ளது கவனமீர்த்துள்ளது.

From Around the web