ஆமிர்கான்- கிரண் ராவ் விவகாரத்தில் மதத்தை வைத்து பிரச்னையை கிளப்பும் கங்கனா..!

 
நடிகை கங்கனா ரணாவத்

பாலிவுட் நடிகர் ஆமிர்கான் மனைவியிடம் இருந்து விவகாரத்து பெற்றது குறித்து நடிகை கங்கனா ரணாவத் சர்சையை கிளப்பும் வகையில் பதிவிட்டுள்ளது சமூகவலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் ஆமிர் கான் மற்றும் இயக்குநர் கிரண் ராவ் விவகாரத்து பெற்றது குறித்து நடிகை கங்கனா மதத்துடன் தொடர்புப்படுத்தி கருத்து வெளியிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்து மதத்தை பின்பற்றும் கிரண் ராவை இஸ்லாமியரான ஆமிர் கான் காதலித்து திருமணம் செய்துகொண்டார். எனினும் அவர்களுடைய மகன் இஸ்லாம் மத அடிப்படையில் வளர்க்கப்பட்டு வருகிறது. ஏன் அந்த குழந்தை இந்துவாக வளர்க்கப்படவில்லை? இஸ்லாமியரை திருமணம் செய்து கொள்ளும் இந்து பெண் ஏன் இந்துவாக தொடர முடிவதில்லை? இந்த பழமையான நடைமுறையை நாம் மாற்ற வேண்டும்” என கங்கனா பதிவிட்டுள்ளார்

மேலும் ஒரு குடும்பத்தில் இந்து, சமணம், பவுத்தர்கள், சீக்கியர்கள், ராதாஸ்வாமி மற்றும் நாத்திகர்கள் ஒன்றாக வாழ முடியும் என்றால், ஏன் இஸ்லாமியர்களால் மட்டும் அது முடியவில்லை?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இது சமூகவலைதளத்தில் மிகுந்த சலசலப்பை உருவாக்கியுள்ளது. இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் பலரும் கங்கனாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விவகாரத்து என்பது கணவன், மனைவிக்கு இடையே நடக்கும் ஒரு விஷயம். சம்மந்தமே இல்லாமல் அதை பற்றி கங்கனா எதற்காக கருத்து சொல்ல வேண்டும். அதில் தேவையில்லாமல் மதத்தை பற்றி பேசி எதற்காக சர்ச்சையை விதைக்க வேண்டும் என பலரும் கண்டணங்களை பதிவு செய்து வருகின்றனர்.
 

From Around the web