”வெள்ளை எலி”...”போதை ஆசாமி”- ரன்பீர் கபூரை வச்சு செய்யும் கங்கனா..!!

இந்தியில் உருவாகவுள்ள ராமாயனம் படத்தில் நடிக்கும் நடிகர்களை மிகவும் தரக்குறைவாக நடிகை கங்கனா ரணாவத் விமர்சித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ranbir kapoor

நிதேஷ் திவாரி இயக்கத்தில் இந்தி சினிமாவில் ராமாயனம் திரைப்படம் உருவாகவுள்ளது. இதில் ராமனாக ரன்பீர் கபூரு, சீதையாக ஆலியா பட்டும், ராவணனாக கன்னட நடிகர் யஷும் நடிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் தீபாவளி பண்டிகையின் போது வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் சில குறிப்பிட்ட நடிகர்கள் நடிப்பதற்கு கங்கனா ரணாவத் போர்கொடி தூக்கியுள்ளார். அதுகுறித்து அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள பதிவில்,

”சக நடிகர்கள் அசிங்கப்படுத்துவதற்கு நன்றாக விளம்பரம் செய்யும் ஒல்லியான வெள்ளை எலி நடிகருக்கு பெண்களும் போதை பொருளும் பலவீனமாக உள்ளது. 
இவ்வளவு நாட்களாக சிவனாக நடிக்க வேண்டும் என்று காத்துக்கிடந்த அவர், தற்போது ராமனாக நடிப்பதற்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது”

ranbir kapoor

“அதே சமயத்தில் ராமாயனக் கதையில் ராவணனாக நடிக்கும் தென்னிந்திய நடிகர், ஒரு நல்ல குடும்பஸ்தர், பாரம்பரியம் தெரிந்தவர், தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டவர், வால்மீகி கூறுவதுபோல ராமனுக்குரிய முக அமைப்புகளை கொண்டவர். ஆனால் அவருக்கு இந்த படத்தில் ராவணனாக நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதால் கலியுகமா?. வெளிர் தோற்றமுடைய எந்த ஒரு குடிகார நடிகரும் ராமனாக நடிக்கக் கூடாது. ஜெய் ஸ்ரீ ராம்” என்று கங்கனா இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் ரன்பீர் கபூரை சாடி தான் இந்த இன்ஸ்டா பதிவை வெளியிட்டுள்ளார் கங்கனா. அவரை தான் “வெள்ளை எலி” , “போதை ஆசாமி” மற்றும் “குடிகார நடிகர்” போன்ற வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். பிரம்மாஸ்திரா படத்தில் சிவா என்கிற கதாபாத்திரத்தில் அவர் தான் நடித்து வருகிறார். “சிவனாக நடிக்க ஆசைப்பட்ட நடிகர்” என்றும் அவரை தான் குறிப்பிடுட்ள்ளார். இந்த பதிவுடன் மேலும் ஒரு பதிவை அவர் பதிவிட்டுள்ளார், அதில்,

yash

“என்னை ஒருமுறை தாக்கினால், உங்களை நான் உங்கள் வாழ்நாள் முழுவதும் தாக்குவேன், என்னை விட்டு சற்று விலகியே இருங்கள்” என்று கங்கனா குறிப்பிட்டுள்ளார். நிதேஷ் திவாரியின் ராமாயனக் கதை சார்ந்த படத்தை கங்கனா இவ்வளவு தீவிரமாக எதிர்ப்பதற்கு காரணம் உள்ளது.

kanagana tweets

அதாவது அலாயுக் தேசாய் என்பவர் “தி இன்கார்நேஷன்: சீதா” என்கிற படத்தை இயக்குகிறார். இதில் கங்கனா சீதையாக நடிக்கிறார். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் செப்டம்பர் 15, 2021-ம் ஆண்டு வந்துவிட்டது. அப்படிப்பட்ட சூழல் ரன்பீர் கபூர் போன்ற முன்னணி நடிகரை வைத்து ராமாயனக் கதை படமாக உருவாக்கப்படுகிறது. இது தனது சீதை குறித்த படத்தின் வியாபாரத்தை பாதித்துவிடுமோ என்கிற எண்ணத்தில் கங்கனா கருத்து பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

From Around the web