அடுத்ததாக இந்திரா காந்தியாக மாறும் கங்கனா ரணாவத்..!

 
கங்கனா ரணாவத்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து முடித்துள்ள கங்கனா ரணாவத், அடுத்ததாக மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக நடிக்க விறுவிறுப்பாக தயாராகி வருகிறார்.

ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தலைவி. இது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த சில முக்கிய சம்பவங்களை தொகுத்து படமாக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தியில் தயாராகியுள்ள இப்படத்தில் கங்கனா ரணாவத் ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ளார்.

ஊரடங்கு முடிவடைந்த பின் இப்படம் திரையரங்குகளில் நேரடியாக வெளியிடப்படவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இந்தியாவில் எமெர்ஜன்ஸி நடைமுறையில் இருந்த போது ஏற்பட்ட நெருக்கடிகளை விளக்கும் புதிய படம் தயாராகிறது. எமெர்ஜன்ஸி என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் கங்கா ரணாவத் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்கிறார்.

இதுகுறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள கங்கனா, ஒவ்வொரு கதாபாத்திரமும் எனது புதிய பயணத்தின் முக்கிய தொடக்கமாக அமையும். இன்று எமெர்ஜன்ஸி படத்திற்காக இந்திரா காந்தி வேடத்திற்குரிய சில பரிசோதனைகளை முயற்சித்தோம். இந்தக் கனவை நனவாக்க பல்வேறு அற்புதமான கலைஞர்கள் ஒன்றிணைய உள்ளனர். இது மிகவும் சிறப்புமிக்க ஒரு பயணமாக இருக்கப்போகிறது என்று அவர் கூறியுள்ளார்.
 

From Around the web