ஜெயலலிதாவை தொடர்ந்து சீதாவாக நடிக்கும் கங்கனா ரணாவத்..!
 

 
கங்கனா ரணாவத்
தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்து முடித்துள்ள கங்கனா ரணாவத், தமிழ் உள்ளிட்ட மூன்று மொழிகளில் தயாராகும் சீதா என்கிற படத்தில் சீதாவாக நடிக்கவுள்ளார்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான கங்கனா ரணாவத் நடிப்பில் தலைவி படம் சமீபத்தில் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து அவர் நடிக்கவுள்ள சீதா படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. பாகுபலி, தலைவி படங்களுக்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாந்த் இப்படத்துக்கு திரைக்கதை எழுதுகிறார்.

முன்னதாக இந்த படத்தில் கரீனா கபூர் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் ரூ. 12 கோடி வரை ஊதியம் கேட்டதால், படக்குழு கங்கனாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இதனுடைய உண்மையான பின்னணி விபரங்கள் தெரியவில்லை. இந்த படத்தை அலாவுகிக் தேசாய் இயக்கவுள்ளார்.  எனினும் இந்த படம் ராமாயண இதிகாசத்தின் தழுவலா என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

From Around the web