ஆண்கள் ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கனிகா- வாயடைத்துப் போன ரசிகர்கள்..!
 

 
நடிகை கனிகா

தமிழகத்தைச் சேர்ந்த நடிகை கனிகா தமிழ் சினிமாவைக் காட்டிலும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். திருமணமாகி குழந்தை பிறந்த பின்னும் மலையாள சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார் கனிகா.

எப்போதும் ஹோம்லியாகவும் சிர்த்த முகத்துடனும் இருக்கும் கனிகா மாறுபட்ட தோற்றத்திற்கு மாறியுள்ளார். ஆண்கள் போல முடிவெட்டிக் கொண்டு மிகவும் கெத்தாக அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

கனிகா அழகு மிகுந்த கேசம் ஏன் இப்படி மாறியது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அண்மையில் ஒப்புக்கொண்ட படத்தின் கெட்-அப்புக்காக கனிகா முடியின் அளவை குறைத்துக்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் அது விக் தான். அதனால் கனிகா முடியை நிஜமாகவே வெட்டிக் கொள்ளவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. தமிழில் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் சேதுபதியுடன் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ மற்றும் விக்ரமுடன் ‘கோப்ரா’ ஆகிய படங்களில் கனிகா நடித்து முடித்துள்ளார். 
 

From Around the web