கண்ணா லட்டு தின்ன ஆசையா பட நடிகை மருத்துவமனையில் அனுமதி..!!
2007-ல் வெளியான ‘ஞானபகம்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை விகாசா சிங். அதனைத் தொடர்ந்து 2008-ல் வெளியான ‘பிடிச்சிருக்கு’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின், கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா, பயம் ஒரு பயணம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது, மாயா டேப் என்ற இந்தி படத்திலும் துரம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வரும் விசாகா, நடிப்பு மட்டுமின்றி மாடலிங், NFT தொழிலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் விசாகா சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் படத்தை விசாகா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறார்.
அவரது பதிவில், என்னால் நீண்ட நேரம் வெளியில் இருக்க முடியாது. கால மாற்றத்தால் அடிக்கடி நடக்கும் வினோதமான நிகழ்வுகள், விபத்து உடல் நிலை பிரச்னைகளுக்கு பிறகு ஆரோக்கியமான கோடையை மகிழ்ச்சிகரமான கோடை திரும்புகிறது.
ஏப்ரல் எனக்கு உண்மையான புத்தாண்டு போல இருக்கிறது. ஒருவேளை இது புதிய நிதி ஆண்டு அல்லது எனது பிறந்த நாள் மாதம் என்பதால் இருக்கலாம். கோடை நாட்களை நோக்கி முழு ஆர்வத்துடன் முன்னேறிவருகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு என்ன பிரச்னை என அவர் குறிப்பிடவில்லை. எதுவாக இருந்தாலும் அவர் விரைவில் குணமடைய வேண்டுமென ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
 - cini express.jpg)