வைரலாகும் லியோ படத்தின் கன்னடா போஸ்டர்..!

 
1

‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் தமிழில் உருவாகும் முதல் 1000 கோடி ரூபாய் வசூல் படம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கிட்டத்தட்ட தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில் முழு வீச்சில் தற்போது படக்குழுவினர் ப்ரோமோஷன் பணியில் இறங்கியுள்ளனர். ப்ரோமோஷன் பணி தொடங்கும் என்று லோகேஷ் கனகராஜ் கூறிய நிலையில் நேற்று இந்த படத்தின் தெலுங்கு பதிப்பின் போஸ்டர் வெளியாகி உள்ளது. 

விஜய்யின் ஸ்டைலிஷ் ஆன அட்டகாசமான லுக் இந்த போஸ்டரில் இருக்கும் நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  பொதுவாக ஒரு திரைப்படத்தின் ஒரு போஸ்டரை அனைத்து மொழிகளுக்கும் பயன்படுத்துவார்கள். ஆனால் ‘லியோ’ படக்குழுவினர் வித்தியாசமாக ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு டிசைனில் போஸ்டரை வெளியிட்டு அசத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், லியோ படத்தின் தெலுங்கு போஸ்டரை வௌியிட்ட படக்குழு, தற்போது கன்னட படத்தையும் வௌியிட்டுள்ளது.


 

From Around the web