ரசிகர்களிடம் "சாரி" கேட்ட கண்ணம்மா ..!!

 
1

விஜய் தொலைக்காட்சி தொடர்களில் பாரதி கண்ணம்மா டிஆர்பி லும் சரி,  சுவாரசியதிலும் சரி தற்போது முன்னிலையில் இருப்பது இந்த சீரியல் தான். கண்ணம்மா கதாபாத்திரத்தில் அறிமுகமான நடிகை ரோஷினி தற்போதைய இந்த தொடர் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார்.

இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இவரின் இயற்பெயரை விட கண்ணம்மா என்கிற பெயர் தான் ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. 

இந்நிலையில் கண்ணம்மாவாக நடித்த ரோஷ்னி ஹரிப்ரியன் தற்போது அந்த தொடரில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு பதிலாக வினுஷா தேவி என்ற மாடல் தான் இனி கண்ணம்மாவாக நடிக்கிறார்.

மாடலிங் மூலம் மீடியாவில் அடியெடுத்து வைத்துள்ள வினுஷா தேவி, தமிழில் விரைவில வெளியாக உள்ள என்4 திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து தான் விலகியது குறித்து ரோஷ்னி ஹரிப்ரியன் தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”வணக்கம், எல்லாரும் எப்படி இருக்கீங்க? சில காரணங்களால் என்னால் பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர முடியவில்லை. நான் எடுத்த முடிவு உங்களை புண்படுத்தியிருந்தால், உங்கள் அனைவரிடமும் நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் என்னால் இந்த உயரத்தை எட்டியிருக்க முடியாது. எதிர்காலத்திலும் நீங்கள் எனக்கு ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன். மிக்க நன்றி” என்று தெரிவித்துள்ளார். 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)

From Around the web