மதநம்பிக்கையை புண்படுத்தும் கரீனா கபூர்- போலீஸில் புகார்..!

 
நடிகை கரீனா கபூர்

மதநம்பிக்கையை புண்படுத்தும் விதமாக நடந்துகொண்டதாகன பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் மீது புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவு நடிகர் சையீப் அலிகானை திருமணம் செய்துகொண்ட  அவர், தற்போதைக்கு சில செலக்டிவான படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில் தனது கர்ப்பகால அனுபவங்களை தொகுத்து கரீனா கபூர் புத்தகம் ஒன்றை எழுதி கடந்த ஜூலை 9-ந் தேதி வெளியிட்டார்.

சமீபத்தில் கரீனா கபூருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. தனக்கு கர்ப்பகாலத்தில் ஏற்பட்ட அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டுள்ளார் கரீனா. ‘பிரெகனன்ஸி பைபிள்’ என்ற பெயரில் வெளியான இந்த புத்தகம் தற்போது விற்பனையில் உள்ளது.

இந்த புத்தகத்தின் பெயரில் பைபிள் என்று இடம்பெற்றுள்ளது கிறிஸ்துவ மத நம்பிக்கையை புண்படுத்துவது போல இருப்பதாக அமைப்பு ஒன்று மஹாராஷ்டிராவில் புகார் அளித்துள்ளது.

இதுகுறித்து சிவாஜிநகர் காவல்நிலைய ஆய்வாளர் சாய்நாத் தோம்ரே கூறுகையில், “நாங்கள் புகாரை பெற்றுக்கொண்டோம். இருப்பினும் சம்பவம் இங்கு நடக்காததால் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யவில்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் மும்பை சென்று புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.

From Around the web