கர்ணன் பட நடிகைக்கு விரைவில் திருமணம்..! குவியும் வாழ்த்துக்கள்..!  
 
​​​​​​​

 
1

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரஜிஷா விஜயன்.

அந்தப் படத்தைத் தொடர்ந்து ‘ஜெய்பீம்’, ‘சர்தார்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். கேரளாவைச் சேர்ந்த ரஜிஷா விஜயன் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

இந்நிலையில் மலையாள படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் டோபின் தாமஸ் என்பவரை ரஜிஷா விஜயன் காதலித்து வருகிறார்.

ரகசியமாக காதலித்து வந்த இவர்கள், தற்போது ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு “1461 நாள்கள் ஓடிவிட்டன. இன்னும் ஒரு பயணம் செல்ல காத்துக் கொண்டிருக்கிறேன்,” என்று பதிவிட்டுள்ளனர். 

From Around the web