கர்ணன் பட நடிகைக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

 
கர்ணன் பட நடிகைக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

கர்ணன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரஜிஷா விஜயன் தன்னுடைய அடுத்த படத்தில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதில் கதாநாயகியாக நடித்த ரஜீஷா விஜயனுக்கு நல்ல பெயர் கிடைத்தது. மேக்-அப் இல்லாத அவருடைய முகவும் மிகவும் எதார்த்தமான நடிப்பும் தமிழக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

அதை தொடர்ந்து ரஜிஷா விஜயன் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘சர்தார்’ படத்தில் நடிக்கிறார். இதில் கார்த்திக்கு ஜோடியா ரஜீஷா விஜயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நேற்று படத்தின் முதல் பார்வை போஸ்டரும் வெளியானது.

மேலும், இந்த தகவலை உறுதிப்படுத்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ரஜீஷா விஜயன். தமிழ் சினிமாவில் அறிமுகமான உடனே அடுத்த படத்தில் மீண்டும் ஒரு பெரிய ஹீரோவுடன் ரஜீஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

From Around the web