கர்ணன் படம் வெளியீடு- கலைப்புலி தாணு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

 
கர்ணன் படம் வெளியீடு- கலைப்புலி தாணு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் தமிழக அரசு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நாளை திரையரங்குகளில் திட்டமிட்டபடி வெளியாகும் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளார்.

பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் ‘கர்ணன்’. இந்த படத்தில் தனுஷ், ரெஜினா விஜயன், கவுரி கிஷன், லால் உள்ளிட்டோர் நடித்துள்ளார். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார்.

இந்த படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழக அரசு மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.


இதனால் ‘கர்ணன்’ படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படுமா என்கிற கேள்வி இருந்தது. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் எஸ். தாணு, ”சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும். அரசின் அறிவிப்பின் படி 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும். கர்ணன் படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
 

From Around the web