சுல்தான் படத்தை ஓரம் கட்டி மொத்த வசூலையும் அள்ளிய கர்ணன்..!

 
சுல்தான் படத்தை ஓரம் கட்டி மொத்த வசூலையும் அள்ளிய கர்ணன்..!

மாஸ்டர் படத்தை தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ’சுல்தான்’ படம் வெளியாகி வசூலை குவித்து வந்ததை அடுத்து, கடந்த வாரம் வெளியான ‘கர்ணன்’ மூன்று நாட்களில் எதிர்பாராத அளவிலான வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

திரையரங்குகளில் நேரடியாக வெளியான கர்ணன் படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை தெரிவித்து வருகின்றனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

முன்னதாக வெளியான கார்த்தியின் சுல்தான் படம் தமிழகம் முழுவதும் சுமார் 25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து வெளியான கர்ணன் படம் முதல் நாளில் ரூ. 11 கோடியும், இரண்டாவது நாளாக ரூ. 9 கோடியும், மூன்றாவது நாளில் ரூ. 13 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் தாணு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் கர்ணன் படம் முதல் மூன்று நாட்களுக்குள் ரூ. 30 கோடிக்கு வசூல் செய்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. சுல்தான் படம் வெளியாகி ஒரு வாரத்தில் ரூ. 25 கோடியை வசூலித்துள்ளது. ஆனால் கர்ணன் படம் வெளியான 3 நாட்களிலேயே சுல்தான் படத்தின் வசூலை தூக்கி சாப்பிட்டுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web