கார்த்தி படத்தில் வில்லனாகும் நட்சத்திர ஹீரோ..!!

விரைவில் உருவாகவுள்ள ‘கார்த்தி 27’ படத்தில், வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
karthi

தற்போது ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜப்பான்’ என்கிற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். இத படம் விரைவில் வெளிவரவுள்ளது. இதையடுத்து அவர் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதன்படி ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார் கார்த்தி. இந்த படத்துக்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

aravind swamy

அதை தொடர்ந்து கார்த்தி 27 படத்துக்கான பணிகள் துவங்குகின்றன. இதை 96 படம் எடுத்த இயக்குநர் சி. பிரேம் குமார் இயக்குகிறார். இந்த படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களை ஒப்பந்தம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன.

அதன்படி கார்த்தி 97 படத்தின் வில்லன் யார் என்கிற விபரம் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்கிறார். படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிகவும் வலுவாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

From Around the web