இளவரசி த்ரிஷா இட்ட ஆணையை நிறைவேற்றி விடைபெற்றார் கார்த்தி..!!

 
கார்த்தி மற்றும் த்ரிஷா

பொன்னியின் செல்வன் படத்தில் தன்னுடைய போர்ஷன் முடிக்கப்பட்டுள்ளது குறித்து நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு நெட்டிசன்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கி வருகிறார் மணிரத்னம். இதனுடைய ஷூட்டிங் பணிகள் பல மாதங்களாக நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. இரண்டு பாகங்களுக்குமான ஷூட்டிங் பணிகளும் நிறைவு கட்டத்தை அடைந்துள்ளன

இந்த படத்தில் வந்தியத்தேவனாக நடித்து வரும் கார்த்தி தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இளவரசி த்ரிஷா நீங்கள் இட்ட அணை நிறைவேற்றப்பட்டது. இளவரசே ஜெயம் ரவி என் பணியும் முடிந்தது என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதில் ட்வீட் செய்துள்ள த்ரிஷா, மிக்க நன்றி கம்ஸா என கார்த்திக்கு தமிழில் பதிலளித்துள்ளார்.
இந்த ட்விட்டர் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்னும் 10 நாட்களில் பொன்னியின் செல்வன் படத்துக்கான மொத்த படப்பிடிப்பும் முடிவடைகிறது. அதை தொடர்ந்து படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web