தேனியில் ஷங்கர் மகளுடன் ஷூட்டிங் போகும் கார்த்தி..!

 
கார்த்தி, அதிதி ஷங்கர் படக்குழு

முத்தையா இயக்கத்தில் கார்த்தி மற்றும் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி சங்கர் நடிக்கும் ‘விருமன்’ பட ஷூட்டிங் விரைவில் தேனியில் நடைபெறவுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் கார்த்தி நடித்து முடித்துவிட்டார். இதையடுத்து மற்ற படங்களில் நடிக்க உடனே ஆயத்தமாகி வருகிறார். தற்போது சர்தார் படத்தில் நடித்து வரும் கார்த்தி, அடுத்ததாக முத்தையா இயக்கும் ‘விருமன்’ படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். விரைவில் இப்படத்துக்கான ஷூட்டிங் தேனியில் துவங்குகிறது. இந்த படத்தில் அதிதி ’தேன்மொழி’ என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தென்னிந்தியாவின் சில பகுதிகளில் இப்பட ஷூட்டிங் நடைபெறுகிறது. குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்திய பட்மாக இது உருவாகவுள்ளது. படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

From Around the web