’பொன்னியின் செல்வன்’ முடித்த பிறகு ஹிட் இயக்குநர் கைக்கோர்க்கும் கார்த்தி..!

 
’பொன்னியின் செல்வன்’ முடித்த பிறகு ஹிட் இயக்குநர் கைக்கோர்க்கும் கார்த்தி..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு பிறகு பி.எஸ். மித்ரன் இயக்கத்திக் தயாராகும் படத்தில் கார்த்தி நடிக்கிறார். 

தமிழில் வெளியான ‘இரும்புத்திரை’ , ‘ஹீரோ’ போன்ற படங்களை இயக்கியவர் பி.எஸ். மித்ரன். இவருடைய முதல் படம் நல்ல வெற்றியை பதிவு செய்தது. ஆனால் மித்ரனின் இரண்டாவது படம் படுதோல்வி அடைந்தது. இதன்காரணமாக தனது அடுத்த படத்தின் கதையை மிகவும் கவனத்துடன் எழுதியுள்ளார்.

இந்த புதிய படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். இதற்கான முதற்கட்ட வேலைகள் தீவிரமாக துவங்கியுள்ளன. அவரும் 26-ம் தேதி இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது. படத்தில் நடிக்கும் ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர் நடிகையர்களின் தேர்வு நடந்து முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

தற்போது ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கார்த்தி நடித்து வரும் நிலையில் அதனுடைய அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படவுள்ளது. அதற்குள் இந்த ப்டாத்தின் முதற்கட்ட பணிகளை முடித்துவிட கார்த்தி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

From Around the web