சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் மீண்டும் இணையும் கார்த்தி - முத்தையா..!

 
முத்தையா மற்றும் கார்த்தி


நடிகர்கள் சூர்யா, ஜோதிகா இணைந்து தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் புதிய படத்துக்கான போஸ்டர் சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் மூலம் கவனமீர்த்த நிறுவனம் உள்ளது 2டி எண்டர்டெயின்மெண்ட். இந்நிறுவனத்தில் தயாரிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

அதிலும் சூரரைப் போற்று திரைப்படம் தேசியளவில் மிகப்பெரிய கவனமீர்த்தது. தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. அந்த படத்தையும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் தயாரிக்கிறது.
மேலும் ராம ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், உடன்பிறப்பே, ஜெய் பீம், ஓ மை டாக் போன்ற படங்களை வரிசையாக இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. இவை அனைத்தும் ஓ.டி.டி-யில் நேரடியாக ரிலீஸ் செய்யப்படவுள்ளன.

இந்த வரிசையில் நடிகர் சூர்யா தனது சகோதரர் கார்த்தியை வைத்து மீண்டும் ’விருமன்’ என்கிற படத்தை  தயாரிக்கிறார். முன்னதாக கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தை சூர்யா தயாரித்திருந்தார். அது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

கார்த்தியை வைத்து கொம்பன் படத்தை இயக்கி முத்தையா தான் இந்த படத்தை இயக்கவுள்ளார். வரும் செப்டம்பர் 18-ம் தேதி தேனியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
 

From Around the web