கார்த்தி, பி.எஸ். மித்ரன் இணையும் புதிய படம்..!

 
கார்த்தி, பி.எஸ். மித்ரன் இணையும் புதிய படம்..!

நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தை பி.எஸ். மித்ரன் இயக்குவதாக உறுதி செய்து, அந்த படத்திற்கான பெயரையும் படக்குழு முதல் பார்வை போஸ்டருடன் வெளியிட்டுள்ளனர். 

கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிதமான வரவேற்பு கிடைத்தது. எனினும், அந்த படம் தெலுங்கில் நல்ல வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்ததாக அவருடைய நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ படம் உருவாகி வருகிறது. மணிரத்னம் இயக்கி வரும் இந்த படத்திற்கான இரண்டாம் கட்ட பணிகள் வரும் ஜூன் மாதத்தில் துவங்கப்படவுள்ளன.

தற்போது தனது அடுத்தப் படத்திற்கான தகவலை வெளியிட்டுள்ளார் நடிகர் கார்த்தி. இந்த படத்தை இரும்புத்திரை, ஹீரோ போன்ற் படங்களை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கவுள்ளார். 

கடந்த மாதம் இந்த படத்திற்கான பூஜை நடைபெற்ற நிலையில், தற்போது படத்தின் பெயர் அடங்கிய முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி கார்த்தி - பி.எஸ். மித்ரன் இணையும் இந்த படத்திற்கு ‘சர்தார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்தார் பட போஸ்டரில் கார்த்தி வயதான தோற்றத்தில் நடிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதனால் இந்த படத்தின் போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 

From Around the web