கார்த்தி போலீசாக நடிக்கும் ‘வா வாத்தியார்’ டீசர் வெளியீடு..! 

 
1

 நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படத்துக்கு ‘வா வாத்தியார்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த் ராஜ், ஜி.எம்.குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் ‘வா வாத்தியார்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தப் படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார் கார்த்தி. மொத்த டீசரும், இசையிலேயே நகர்கிறது. ஆனந்த் ராஜுக்கான ‘எம்ஜிஆர்’ கெட்டப், சத்யராஜின் வித்தியாசமான தோற்றம், எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரண் என கதாபாத்திரங்கள் கவர்கின்றன.

From Around the web