கார்த்தி சொன்ன உண்மை! சூர்யாவுக்கு ஹீரோயின்கள் என்றாலே...

 
1

கங்குவா படத்தின் பிரமோஷனுக்காக, நடிகர் சூர்யா, பாபி தியோல் மற்றும் படக்குழுவினர், இந்தியா முழுவதும் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக, தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமுரி பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கி வரும் Unstoppable With NPK நிகழ்ச்சியில் சூர்யா, பாபி தியோல், மற்றும் சிறுத்தை சிவா கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஒருபகுதியில், பாலைய்யா நடிகர் கார்த்திக்கு கால் செய்து, "உங்களின் அண்ணன் நிறைய பொய் சொல்கிறாரே?" என்று கேலியாக கேட்டார். அதற்கு கார்த்தி, "அவர் சிறுவயதிலிருந்தே அப்படித்தான், நிறைய பொய்கள் சொல்லும் அவருக்கு ஹீரோயின்கள் என்றாலே சற்றே அதிகமான ஈடுபாடு!" என்று பதிலளித்தார்.இதற்கு சூர்யா "நீ கார்த்தி இல்லடா, கத்திடா!" என்று நகைச்சுவையுடன் கூறினார், இதனால் நிகழ்ச்சியிலும் கலகலப்பான சூழல் நிலவியது.

உங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடைசிச் சண்டை எந்த விஷயத்தில் என்று பாலகிருஷ்ணா கேட்க, உண்மை சொல்லவா, பொய் சொல்லவா? என்று சூர்யா பதிலளித்தார். இதற்குப் பாலகிருஷ்ணா சீரியஸாக எழுந்து வந்து சூர்யாவை உற்றுப் பார்த்தார். இதற்குச் சூர்யா பதிலளிக்க, இறுதியில் நான் உன்னை நேசிக்கிறேன் என்று கூறியது சிறப்பம்சமாக அமைந்தது. இதனால் சூர்யா நிம்மதிப் பெருமூச்சு விட்டார். 

அதன்பிறகு உங்கள் முதல் காதல் பற்றி சொல்லுங்கள் என பாலகிருஷ்ணா கேள்வி எழுப்பியதும் , அதிர்ச்சியில் சூர்யா முகத்தைத் திருப்பிக் கொண்டார். சார் வேண்டாம் சார் , பிரச்சனையா ஆகிடும், வீட்டுக்குப் போக வேண்டும் என்று கூறியது வேற லெவல் சிரிப்பலையை ஏற்படுத்தியது. 

உங்களை பற்றிய சில ரகசியங்களை யாரிடம் பகிர்ந்து கொள்வீர்கள்? கார்த்தியிடமா, ஜோதிகாவிடமா என்று பாலகிருஷ்ணா கேட்டு விட்டு, சூர்யாவின் இதயத்தைப் பரிசோதித்தார். என் இதயம் 240 முறை துடிக்கிறது சார் என்று சூர்யா கூற, அதென்ன ஜோதிகா ஜோதிகா என்று துடிகிறது என்று பாலகிருஷ்ணா கேட்டார். கார்த்தியைப் பற்றிய விஷயங்களை ஜோதிகாவிடமும், ஜோதிகாவின் ரகசியங்களை... கூறுவீர்களா என்று கூறி சஸ்பென்ஸில் விட்டார். இதனால் மனைவி ஜோதிகாவின் ரகசியங்களை கார்த்தியிடம் சூர்யா பகிர்ந்து கொள்வாரா? என்ற சந்தேகத்தை ரசிகர்களுக்கு எழுந்தது. 

அதன்பிறகு ஜோதிகா பற்றி உருக்கமாக பேசிய சூர்யா... அவர் இல்லாமல் என் வாழ்க்கையை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்று கூறி மேடையிலேயே தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார் சூர்யா. 

பின்னர் நகைச்சுவையாகச் சென்ற நிகழ்ச்சி திடீரென உணர்ச்சிப்பூர்வமாக மாறியது. சிறு குழந்தைகள் தங்கள் உடல்நலக் குறைபாடுகளைப் பற்றிக் கூறியபோது சூர்யா கண்ணீர் விட்டார். தனது அகரம் அறக்கட்டளை மூலம் பல ஆதரவற்ற குழந்தைகளைப் படிக்க வைப்பது, உள்ளிட்ட சில நெகிழ்ச்சியான விஷயங்களை சூர்யா பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web