தனுஷை அடுத்து பிரபல நடிகருடன் இணைந்த கார்த்திக் நரேன்..!

 
கார்த்திக் நரேன்

தனுஷ் நடித்துள்ள ‘மாற்றான்’ படத்தை இயக்கி முடித்துள்ள கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் நரேன் மிகவும் இளம் வயதில் ‘துருவங்கள் 16’ படத்தை இயக்கி நாட்டையே திரும்பி பார்க்கவைத்தார். சஸ்பென்ஸ் த்ரில்லராக வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

அடுத்ததாக அவர் அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்த ‘நரகாசூரன்’ படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் பல ஆண்டுகள் கடந்தும் இதுவரை வெளிவராமலே உள்ளது.

இதையடுத்து கார்த்தி நரேன் இயக்கத்தில் வெளியான ‘மாஃபியா’ படம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து தற்போது தனுஷ் நடிப்பில் ‘மாற்றான்’ படத்தை அவர் இயக்கி முடித்துள்ளார். 

இது விரைவில் ‘ஹாட் ஸ்டார்’ ஓடிடி தளத்தில் வெளிவரவுள்ளது. இதையடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவர் அடுத்ததாக அதர்வா நடிக்கும் படத்தை இயக்குகிறார். 

விரைவில் இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளிவரவுள்ளது. பாலா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அதர்வா நடிக்கிறார். அதை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் அவர் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

From Around the web