உடல்நலத்துடன் படப்பிடிப்புக்கு திரும்பினார் கார்த்திக்- பூங்கொத்து கொடுத்த சிம்ரன்..!

 
உடல்நலத்துடன் படப்பிடிப்புக்கு திரும்பினார் கார்த்திக்- பூங்கொத்து கொடுத்த சிம்ரன்..!

மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் கார்த்திக் தற்போது பூரண உடல்நலம் பெற்று மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளார். 

பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற அந்தாதுன் திரைப்படம் தமிழில் அந்தகன் என்ற பெயரில் தயாராகி வருகிறது. கதாநாயகனாக பிரசாந்த் மற்றும் கதாநாயகியாக ப்ரியா ஆன்ந்த நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரன், சமுத்திரக்கனி மற்றும் வனிதா விஜயகுமார் நடிக்கின்றனர். இதில் சிம்ரனின் கணவராக கார்த்திக் நடித்து வந்தார். அதை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரச்சாரத்தில் அதிமுக-வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. சில நாட்கள் அவர் தீவிர சிகிச்சையிலும் அனுமதிக்கப்பட்டார். பிறகு உடல்நலம் பெற்று வீடு திரும்பினார் நடிகர் கார்த்திக்.

சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் அந்தகன் படப்பிடிப்பு திரும்பியுள்ளார் நடிகர் கார்த்தி. அவரை படக்குழுவினர் பிரசாந்த், சிம்ரன், இயக்குநர் தியாகராஜன் உள்ளிட்டோர் பூக்கொத்து கொடுத்து வரவேற்றனர். தற்போது அந்தகன் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. 

From Around the web