ஷங்கருடன் கூட்டணி அமைக்கும் கார்த்திக் சுப்புராஜ்- முழு விபரம் உள்ளே..!

 
கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ஷங்கர்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் ஷங்கரும் வளர்ந்து வரும் இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ் இணைந்து புதிய படத்தில் பணியாற்றிவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியன் 2 விவகாரத்தில் லைகாவின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். அதை தொடர்ந்து அவர் படம் இயக்குவதில் மும்முரமாக உள்ளார். தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை அடுத்ததாக இயக்குகிறார் ஷங்கர்.

தற்போது இந்த படத்திற்கான திரைக்கதை எழுதும் பணியில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் உருவாக்கப் பணிகளை பார்த்த ஷங்கர், கார்த்திக் சுப்புராஜுக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளதாக தெரிகிறது.

கார்த்திக் சுப்புராஜ் தற்போது விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் ‘சியான் 60’ படத்தை இயக்க தயாராகி வருகிறார். இதனுடைய இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
 

From Around the web