ஜகமே தந்திரம் படத்தில் இரண்டு பாடல் இடம்பெறாது- கார்த்திக் சுப்புராஜ் அறிவிப்பு..!

 
கார்த்திக் சுப்பராஜ்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தில் இரண்டு பாடல்கள் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேட்ட படத்திற்கு பிறகு கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி கதாநாயகியாக நடித்துள்ளார். சஞ்சனா நடராஜன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, வடிவுக்கரசி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரும் ஜூன் 18-ம் தேதி இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படவுள்ளது. ஏற்கனவே சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ பட பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை குவித்துவிட்டது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மொழிமாற்றத்தை கருதி படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் நீக்கப்பட்டுள்ளதாக கார்த்தி சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இது சந்தோஷ் நாராயணன் தரப்புக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பாடல்கள் ‘புஜ்ஜி’ மற்றும் நேத்து ஆகியவை ஆகும். இதில் புஜ்ஜி பாடலை அனிருத்தும், நேத்து பாடலை தனுஷுன் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web