‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய கரு.பழனியப்பன்..!!

 
1

இயக்குநர் கரு பழனியப்பன், நடிகர் அருள்நிதியை வைத்து தற்போது ஒருபடம் இயக்கி வருகிறார். அதேநேரம், தனியார் தொலைக்காட்சியில் ‘தமிழா தமிழா’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேறுவதாக அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

 தமிழ் பரப்பில் தளம் அமைத்துக் கொடுத்த ஜீ தமிழ் உடனான நான்கு வருட “தமிழா தமிழா” பயணம் இனிதே முடிவுக்கு வந்தது…!

சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில், அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது. எளியோரின் குரலாய் ஒலிக்க, இன்னும் பரந்துபட்ட தளத்தில் விரைவில் சந்திப்போம்” 

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

,

From Around the web