கருங்காப்பியம் படத்திற்கு தடை..!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
ஹாரர் த்ரில்லர் கதைக்களத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருங்காப்பியம்’. ‘யாமிருக்க பயமேன்’, ‘கவலை வேண்டாம்’, ‘காட்டேரி’ போன்ற படங்களை’ இயக்கிய டிகே இந்த படத்தை இயக்கியுள்ளார். வெற்றிவேல் டாக்கீஸ் தயாரிக்கும் இப்படம் ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ளது.
இந்த படத்தில் காஜல் அகர்வால், ரெஜினா, ரைசா வில்சன், ஜனனி உள்ளிட்ட நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர். நடிகர் நடிகர் கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ஆதவ் கண்ணதாசன், யோகிபாபு, அதிதி ரவீந்திரநாத், ஷெர்லின் சேத், நோய்ரிகா, லொல்லு சபா மனோகர், ‘குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்
வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படத்தை வெளியிட நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. இது குறித்து சஞ்ஜீத் சிவா ஸ்டுடியோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிக்கையில், ‘கருங்காப்பியம்’ படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் திரையரங்குகளில் திரையிடும் முழு விநியோக உரிமையை ஐ கிரியேஷன் நிறுவனத்திடமிருந்து சஞ்ஜீத் சிவா ஸ்டுடியோ பெற்றிருந்தது. இதற்கு தயாரிப்பு நிர்வாகமாகிய பாவே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் ஒப்புதல் அளித்திருந்த நிலையில் சமீபகாலமாக ஐ கிரியேஷன் நிறுவனமே நேரடியாக திரைப்படத்தை வெளியிடவுள்ளதாக வதந்தியை கிளப்பி வருகின்றனர்.
இவையாவும் இதர விநியோகஸ்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. அதனால் நாங்கள், ஐ கிரியேஷன் மீது வழக்கு தொடர்ந்த நிலையில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ‘கருங்காப்பியம்’ திரைப்படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.