மாரிதாஸை ட்விட்டரில் பறக்கவிட்ட கஸ்தூரி..!

 
மாரிதாஸை ட்விட்டரில் பறக்கவிட்ட கஸ்தூரி..!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு பல தரப்பினர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

அப்போது நடிகர் சித்தார்த் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறி தமிழகம் எதிர்காலம் சிறக்கட்டும் என்று குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார். தற்போது கொரோனாவால் தமிழகம் திண்டாடி வரும் நிலையில், பாஜக ஆதரவாளராக தன்னை குறிப்பிட்டுக்கொள்ளும் மாரிதாஸ், முதல்வர் ஸ்டாலினை ஆதரித்து நடிகர் சித்தார்த் போட்ட பதிவை விமர்சித்துள்ளார்.


அதில் நடிகர் சித்தார்த்தை கூத்தாடி என்று குறிப்பிட்டு அவரை ஒருமையில் விமர்சித்துள்ளார். இதற்கு பதிலடி தரும் விதமாக ட்வீட் செய்துள்ள நடிகை கஸ்தூரி, சித்தார்த்தை விமர்சிக்கும் போது எதற்காக அவருடைய தொழிலை மட்டமாக ஏன் குறிப்பிட வேண்டும், நடிகர்கள் கூத்தாடி என்றால், நீங்கள் வாயாடி சரியா? என்று வினவி பதில் அளித்துள்ளார். நடிகை கஸ்தூரியின் இந்த பதிலடி பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. 

From Around the web