தீபாவளிக்கு ஓ.டி.டி-யில் வெளியாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’..?

 
காத்துவாக்குல ரெண்டு காதல்

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோ நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் நேரடியாக ஓ.டி.டியில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘தானே சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. நகைச்சுவை கலந்த காதல் கதையில் உருவாகும் இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தில் இருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுவிட்டன. பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் இந்த படத்துக்கான படப்பிடிப்பு பணிகள் நடத்தப்பட்ட போது புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

தற்போது இப்படத்துக்கான இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் நவம்பர் மாதம் 3-ம் தேதி  டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

From Around the web