உரி - தி சர்ஜிகல் ஸ்டிரைக் பட ஹீரோவை திருமணம் செய்யும் கத்ரீனா !!

 
1

நடிகை கத்ரினா கைப் ஹாங்காங்கில் பிறந்தவர். அவருக்கு 5  சகோதரிகள் உள்ளனர். அவருடைய தாயார் பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் ஆவார், தந்தை காஷ்மீரை சேர்ந்தவர் . அவர் ‘பூம்’ திரைப்படம் மூலமாக இந்தி சினிமாவுக்கு அறிமுகமானார்.

அவருக்கும் பிரபல நடிகர் விக்கி கவுசாலுக்கும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது என்று செய்தி வெளியாகி உள்ளது. 'லஸ்ட் ஸ்டோரிஸ்', 'உரி - தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் விக்கி கவுசல்.

1

நடிகை கத்ரினா கைப் 1983ம் ஆண்டு பிறந்தவர். நடிகர் விக்கி கவுசால் 1988ம் ஆண்டு பிறந்தவர். இவர்கள் இருவருக்குமிடையே 5 வயது  இடைவெளி உள்ளது.இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் அந்த விஷயம் வெளிவராமல் ரகசியமாக இருந்தது. இந்நிலையில், டிசம்பர் மாதம் அவர்களது திருமணம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இவர்களது திருமண செய்தி கேட்ட பாலிவுட் ரசிகர்கள் கத்ரீனாவுக்கு, விக்கிக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

From Around the web