மெகா ஹிட் ஹீரோயினை வளைத்துப் போட்ட கவின்..!!

தமிழில் சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் கவின். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கெடுத்ததன் மூலம், இவருக்கு ரசிகர் வட்டம் உருவானது. இதன்மூலம் பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது.
கவின் நடிப்பில் வெளியான லிஃப்ட் திரைப்படம் நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியானது. அதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அவர் தமிழ் சினிமாவின் பிஸியான நடிகராக மாறினார். அவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் டாடா.
இப்படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவு இப்படத்துக்கு கிடைத்தது. இதையடுத்து அவர் நடிக்கும் படம் மீது இப்போதே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டாடா படத்தை தொடர்ந்து கவின் நடிக்கும் படத்தை இளன் இயக்குகிறார்.
இவருடைய இயக்கத்தின் முன்னதாக பியார் பிரேமா காதல் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து நளன் நடிகர் தனுஷுக்கு கதை கூறியிருந்தார். ஆனால் தனுஷ் காலம் கடத்தியதால், அந்த கதையில் கவினை நடிக்கவைக்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி கவின் அடுத்ததாக நடிக்கும் படத்தை நளன் இயக்குவது உறுதியாகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு ப்ரீத்தியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நடிகை ப்ரீத்தி சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற அயோத்தி படத்தில் ஹீரோயினாக