படத்தை பார்க்கிருவன் என்ன முட்டாளா..! நீ கண்டிப்பா மாட்டிக்குவே - வெளியான கவினின் ப்ளடி பெக்கர் ட்ரெய்லர்..!

 
1

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிக்கும், இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்சயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் கவின் பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் டீசர் இந்த மாதம் அக்.7 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இன்று அந்த படத்தின் இந்த ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லரில் பிச்சைக்காரனாக நடைக்கும் கவின் ஒரு அரண்மனைக்குள் சென்றுவிடுகிறார். அங்கு அவரை வேறு ஒரு நபராக மாற்றி விடுகின்றனர்.

இதனை தொடர்ந்து அங்கு நடக்கும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதையாக இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் கவினுக்கு இப்படமும் பெயர் சொல்லும் படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் இந்த படமானது வரும் தீபாவளி வெளியாகி சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அமரன்', ஜெயம் ரவி நடிப்பில் 'பிரதர்ஸ்' ஆகிய படங்களுடன் மோதவுள்ளதால் இந்த தீபாவளி சினிமா ரசிகர்களுக்கு பெரும் வரபிரசாதமாக அமையும் எனலாம்.

From Around the web