இணையத்தில் வைரலாகும் கவினின் ‘ஸ்டார்’ பட ஸ்பெஷல் ப்ரோமோ..!

நடிகர் கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ‘ஸ்டார்’. இந்தத் திரைப்படத்தை ‘பியார் பிரேமா காதல்’ எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கி வருகிறார். இப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் கவின் நடிக்கிறார். இவருடன் பாலிவுட் நடிகை ஒருவரும், கோலிவுட் நடிகை ஒருவரும் ஜோடியாக இணைகிறார்கள். மேலும் மலையாள திரையுலகின் பிரபல நடிகர் ஒருவரும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். பன்மொழி ரசிகர்களை கவரும் வண்ணம் இத்திரைப்படத்தின் கதையும், கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
‘நித்தம் ஒரு வானம்’ எனும் திரைப்படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும், ‘விருபாக்ஷா’ படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை வினோத் ராஜ்குமார் கவனிக்கிறார். தேசிய விருது வென்ற ஆடை வடிவமைப்பாளரான சுஜித் சுதாகரன் ஆடை வடிவமைப்பாளராகவும், எஸ். வினோத்குமார் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.
இந்த நிலையில், யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளான நேற்று (ஆகஸ்ட் 31) இப்படத்தில் இருந்து பிரத்யேக புரோமோ வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.