குழந்தைகளையும் கவர்ந்த ‘காவாலா’ பாடல்... ரீட்வீட் செய்த தமன்னா.. வைரல் வீடியோ!

‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. இந்தப் படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இந்தப் படத்தில், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முத்துவேல் பாண்டியன் என்ற வேடத்தில் ரஜினி நடித்து வருகிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்தப் படம், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஜெயிலர் படத்தின் முதல் பாடல் நேற்று முன்தினம் வெளியானது. அனிருத் இசையில் அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ள காவாலா என்ற பாடல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த பாடல் குறித்து விமர்சனங்கள் அதிகம் இருந்தாலும் அதே அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவும் தவறவில்லை.
மேலும் இந்த பாடலில் கேமியோவில் ரஜினிகாந்த் தோன்றியுள்ள நிலையில், தமன்னா பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த பாடல் மற்றும் தமன்னாவின் நடனம் இணையத்தில் வைப் ஆகி வரும் நிலையில், இந்த பாடல் குழந்தைகள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது.
Morning dose of cuteness #Kaavaalaa 🥰
— Achilles (@Searching4ligh1) July 8, 2023
Your real competitor is here @tamannaahspeaks 😀
Your music is just putting people in trance @anirudhofficial 😇 #Jailer #Rajinikanth #SuperstarRajinikanth pic.twitter.com/glf4A9lgT9
இதனை உறுதி செய்யும் வகையில் காவாலா பாடலுக்கு ஒரு குழந்தை நடனமாடும் வீடியோ பதிவு ஒன்ற தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், குழந்தைக்கு கூட தமன்னாவின் நடனம் தாகத்தை ஏற்படுத்தியுள்ளதா என்று ரசிகர்கள் ஆச்சரியமடைந்து வருகின்றனர்.