தம்பி படத்தை வாங்கிய அண்ணன்..!!
May 15, 2023, 16:05 IST

அருள்நிதி நடிப்பில் தயாராகியுள்ள கழுவேத்தி மூர்க்கன் படத்தை, உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெய்ண்டு மூவிஸ் நிறுவனம் வாங்கி வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி படத்தை இயக்கியவர் வை. கவுதமராஜ். இவர் இயக்கத்தில் தயாராகி வரும் படம் தான் கழுவேத்தி மூர்க்கன். அருள்நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். முன்னதாக வெளியான ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனமீர்த்தது. அண்மையில் படத்தின் டிரெய்லரையும் படக்குழு வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் கழுவேத்தி மூர்க்கன் படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினி ரெட் ஜெயிண்டு மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக படக்குழுவும் ரெட் ஜெயிண்டுடன் கைக்கோர்ப்பதில் மகிழ்ச்சி தெரிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளது.